ஆறு நாட்டு வேளாளர்களின் ஆதி ஊர் சிதம்பரம். ஆறு நாட்டு வேளாளர் என்ற ஜாதி 1170-1192ம் ஆண்டுகளின் இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நம் வேளாளர் குலத்தினர் 1700-1800 இடையேயான வருடங்களில் சிதம்பரத்தை விட்டு திருச்சிக்கு குடியேறியிருக்கிறார்கள். திருச்சியில் 1876ல் தான் நிலம் வாங்கியிருக்கிறார்கள் என தடயங்கள் உள்ளன. ஆக மேற்கண்ட உறுதியான ஆதாரங்களின் துணையுடன் ஆறுநாட்டு வேளாளர்களின் கி.பி.12ம் நூற்றாண்டுக்கு முன்பே சிதம்பரத்தில் வசித்து வாழ்ந்துள்ளனர்.அவர்கள் 12ம் நூற்றாண்டில் தமக்கென்று ஓர் மடத்தையும், சத்திரத்தையும் ஸ்தாபித்துள்ளார்கள் எனவும் புலப்படுகிறது. இவர் திருச்சி ஜில்லாவிற்கு வந்தது ஏன் இந்திய சரித்திர வரலாற்றை ஆராயும் போது, ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றிய காலம் வரை இந்தியாவிலுள்ள பல ஊர் அரசர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி நாட்டைப் பிடிக்கும் ஆசையில் யுத்தம் செய்து, நாடே நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறது. குறிப்பாக வடக்கிலிருந்து முஸ்லீம் அரசர்கள் தென்னாட்டிலுள்ள கோவில்களில் உள்ள தங்கம், வைரம் போன்ற செல்வங்களை கொள்ளையடிக்கும் நோக்கில் அடிக்கடி கடல், ஆறுகள் வழியாகவும் வந்து சென்றிருக்கிறார்கள்.யுத்தத்திற்கும், கொள்ளையடிக்க வரும் எதிராளிகளை சமாளிப்பதற்கும், தென்னாட்டிலுள்ள அரசர்கள் தங்கள் படைகளிலுள்ள போர் வீரர்கள் மடியும் போது, மீண்டும் மீண்டும் போர்ப்படைக்கான வீரர்களை திரட்டி இருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர், இருவர் என திரட்டி உள்ளனர். இதனால் பல குடும்பங்களில் நிம்மதி இல்லை,
Temple History



சிதம்பரம் வட்டத்தில் கடல் 10 கிலோ மீட்டர் தொலைவிலும், சிதம்பரம் ஊடே ஆறு ஓடுவதாலும், இஸ்லாமியப்படைகள் அடிக்கடி இவற்றின் வழியே வந்து கோயில்களை கொள்ளையடித்தும், எதிர்ப்பட்டவர்களை கொன்றும் கொடுமைகள் செய்தனர், இதனால் ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தினர் நிம்மதி இழந்தனர். எனவே தமக்கு கஷ்டமும், - நஷ்டமும் இன்றி வாழ கடல், ஆறு இல்லாத மேட்டுப்பகுதியான திருச்சி ஜில்லாவை தேர்ந்தெடுத்தனர். ஆறு நாட்டு வேளாளர் குலத்தினர் சிறிது, சிறிதாக 17ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டுக்குள் திருச்சி ஜில்லாவிற்கு வருகை தந்து விரும்பிய ஊர்களில் தங்கி உள்ளனர். இவர்கள் 18ம் நூற்றாண்டு நிலத்தை கிரையம் செய்ததற்கு போதிய சான்றுகள் உள்ளன.ஆறுநாட்டு வேளாளர்களை பற்றி சரித்திரம் கூறுவது சிதம்பரத் தில் வசித்து வந்த ஆறுநாட்டு வேளாளர்கள் மிகவும் கௌரவமாகவும், சுதந்திரமாகவும், பிறரிடம் கடன் வாங்காமலும், உழவுத்தொழில் ஒன்றையே செய்தும் வாழ்ந்தும் வந்திருக்கிறார்கள். ஆங்கிலேயரான எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். மேலாளர் சமூகத்தின் மிகவும் மதிக்கப்பட்டு கெளரவிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள் மிகவும் நேர்மையானவர்களாகவும், நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பவர்கள். இதன் காரணமாக தஞ்சாவூர் மகாராஜா தன் பிறந்த நாளன்று தனது எடைக்கு எடை தங்கக்கட்டிகளை நிறுவை செய்வதற்கு ஒரு வெள்ளாளரையே தேர்ந்தெடுத்தாராம். அதன்பின் மதுரையை ஆண்ட அரசர் சோமசுந்தர பாண்டியர், தனது முடிசூட்டு விழாவின் போது முடியை ராஜா தலையில் சூட்ட ஓர் வேளாளர் தான் உகந்தவர் என முடிவு செய்து, முடிசூட செய்தாராம்

ஆங்கிலேயர்கள் 18ம் நூற்றாண்டில் இந்தியா வந்தமையாலும், அவர்களுடைய ஆராய்ச்சி 19ம் நூற்றாண்டில் செய்திருப்பதாலும், ஆறுநாட்டு வேளாளரை பற்றி ஆராய்ச்சிகள் பூரணமாக எழுதப்பட முடியவில்லை. ஆனாலும் சரித்திர ஆராய்ச்சிப்படி 12ம் நூற்றாண்டில் சிதம்பரத்தில் மடம் கட்டி, : முன்னோர்கள் ஆறுநாட்டு வேளாளர் என ஓர் உட்பிரிவை ஏற்படுத்தினர். 17ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டு வரை திருச்சி, சேலம், நாமக்கல் வட்டாரத்தில் குடியேறினர் என்பது வரலாறு. ஆறுநாட்டு வேளாளர்கள் வரலாற்றினை தஞ்சாவூர் மகாராஜ சரபோஜி சரஸ்வதி மஹால் நூலக சபை, திருச்சி அண்ணா பவளவிழா கட்டிட நூலகம், சென்னை கன்னிமாரா நூலகம் ஆகிய நூலகங்களிலிருந்த புத்தகத்திலிருந்து திருவானைக்கோவில் ஆறுநாட்டு வேளாளர் சத்திரத்திலிருக்கும் இரண்டு செப்பேடுகளில் இருந்தும் அறிந்ததில் எழுதியிருக்கிறேன். நமது ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தில் அதிக குடிபாடுகளை கொண்ட கோத்திரமான நமது சமய மந்திரி கோத்திரம் இப்பவும் தனிச்சிறப்பாகும். மேலும் நமது சமய மந்திரி கோத்திர பங்காளிகள் விவசாயம், வியாபாரம், மருத்துவம், கணிப்பொறி வல்லுநர்கள் என எல்லா துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். நமது சமய மந்திரி கோத்திரத்தாரின் வரலாற்றை பார்க்கும் போது, தஞ்சாவூர் மகாராஜா சரபோஜி சரஸ்வதி மஹாலில் உள்ள ஓலையேட்டில் அரசு நிர்வாகத்தில் வேளாளர் குலத்தினை சேர்ந்த சமயமந்திரி கோத்திரத்தார்கள் மன்னனுக்கு மந்திரியாகவும், தானிய கிடங்கு மற்றும் அனைத்து முக்கிய பொறுப்புகளிலும் இருந்திருப்பது தெரியவந்துள்ளது. இது நமது சமய மந்திரி கோத்திரத்தாரின் தனிச்சிறப்பிற்றுக ஓர் சான்றாகும்.
கோயில்:
இனி கோயில் வரலாற்றினை பார்க்கும் போது நம் கோத்திரத்தார் சிதம்பரத்திலிருந்து குடிபெயர்ந்து திருச்சி மாவட்டத்தில் குடியேறி குலதெய்வ வழிபாட்டினை மேற்கொண்ட முதல் கோத்திரம் என்ற சிறப்பும் நமக்கு உண்டு. அருள்மிகு நமது அரவாயி அம்மன் கோயில் சிதம்பரம்கோயில் மூலஸ்தானத்தை போன்ற அமைப்பை கொண்டதாகும். தற்போது தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சென்று நமது குலதெய்வத்தினை கும்பிடும் வசதி நமது கோத்திரத்தார்களுக்கு உள்ள தனிச்சிறப்பாகும்.
இனி வழிபாட்டு முறையைப் பார்ப்போம்:
நமது குலதெய்வ கோயிலில் மூலஸ்தானத்தில் நடு நாயகமாக அருள்மிகு ஸ்ரீ அரவாயி அம்மனும் வலது புறத்தில் ஸ்ரீமகேஸ்வரி அம்மனும் இடது புறத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனும் அமைப்பு கொண்டுள்ளனர். காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ புரவிக்காலர் சுவாமிகளும் மேற்கு புறத்தில் கிழக்கு பார்த்து அருள்மிகு ஸ்ரீ செட்டியப்பன் சுவாமியும் அமையப்பெற்ற அமைப்பாக உள்ளது. இக்கோயிலில் வடக்கு வழியாகவும் கிழக்கு வழியாகவும் வாசல் அமைப்பு கொண்டுள்ளது.
தல விருஷ்மான துரட்டி என மருத்துவ குணம் நிறைந்த மரம் உள்ளது. இம்மரத்தின் இலையை நமது பங்காளிகள் தங்கள் வீட்டு பூஜை அறையில் உள்ள விபூதியில் சேர்க்கும்வழக்கம் இன்று இன்று வரை உள்ளது. இன்று நடைபெறும் மகா பூஜையில் விபூதியுடன் சேர்த்து துரட்டி இலையையும் வழங்கியிருக்கிறோம்.
நமது பங்காளிகள் குலதெய்வ வழிபாடு செய்யும் நடைமுறையைப் பார்ப்போம்:
பங்காளிகள் பொங்கலிட்டு மூலஸ்தானத்திற்கு 2 தேங்காய் 3 பூமாலை, எலுமிச்சப்பழம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, பத்தி, நெய்(மூன்று தீபத்திற்கு) வஸ்திரம் அருள்மிகு புரவிக்காலருக்கு 3 முழம் கதம்பம் 15 (அ) 12 அடி மாலை, வேட்டி துண்டும் அருள்மிகு செட்டியப்பன் சுவாமிக்கு வஸ்திரம் வைத்து வழிபடவேண்டும். பிறக்கும் முதல் ஆண் குழந்தைக்கு மங்களம் ஸ்ரீ அரவாயி அம்மன் கோயிலிலும், இரண்டாவது பெண் குழந்தையாக இருந்தால் ஓமாந்தூர் காமாஷி அம்மன் கோவிலிலும் திருமுடி காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. காது குத்தும் வழக்கமும் உள்ளது. நமது முன்னோர்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் முன் தத்தம் வீட்டு கோயிலுக்கும் சென்று விளக்கேற்றி சென்றுள்ளனர்.
புதிதாக திருமணம் செய்யும், நமது சமய மந்திரி பங்காளிகள் திருமணத்தன்று மாலை முதல் குலதெய்வ வழிபாடு செய்வார்கள். நமது வீட்டு கோயில்களின் விபரம் குடிவடி சீட்டின் பின்புறம் அச்சடிக்கப்பட்டுள்ளது. நமது பங்காளிகள் குலதெய்வ வழிபாட்டை தவறாது செய்து எல்லாம் வல்ல மங்களத்து அருள்மிகு ஸ்ரீ அரவாயி அம்மன், அருள்மிகு ஸ்ரீ புரவிக்காவலர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ செட்டியப்பன் ஆகியோரது அருளும், ஆசியும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டிக்கொள்கிறேன். "நமது குல தெய்வ வழிபாடு ஏன் அவசியம் என்பதை நமது பங்காளிகள் மற்றும் நமது உறவினர்களுடன் நமது மகா பூஜையில் பகிர்ந்து கொள்ள அருள்மிகு ஸ்ரீ அரவாயி அம்மன் நமக்கு ஏற்படுத்தி தந்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பகிர்ந்து கொள்கிறேன்." நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் அப்பாயிகள் வணங்கி வந்த தெய்வம் தான் நம் குலதெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில் மிகப் பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்' கோத்திரம்' என்னும் ஒரு பங்காளிகள் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழியாக நம் பாட்டன்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால் பங்காளிகள் பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல் ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு யாரும் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால் குலதெய்வக் கோயிலுக்கு நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே நம் தாய் தந்தையரால் அங்கு அழைத்து செல்லப்பட்டு முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால் குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா? அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாது. அதிகபட்சமாக நம் பாட்டன், பூட்டன் பெயருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது? ஒரு குடும்பத்தைப் பொறுத்த வரையில் இந்த இறைசக்தி குல தெய்வமாக அவர்களுக்கான ஒருபெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வது வெளிப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்... நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில் நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.
இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் குலதெய்வ கோவிலில் போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் இந்த இறைசக்தியைத் தொழும் போது அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்துபார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனைதூரப் பார்வையோடு வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்.நம் குலதெய்வ வழிபாட்டில் மிகப் பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால் அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை. நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலைவந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால் அவர் இவ்வாறு ஒருநாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால் அவர் ஒரு நாள் நிச்சயம் மனம் மாறி மீண்டும் ஆத்திகத்திற்கு வருவார் என்பதுதான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.
குறைகள் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு:
குலதெய்வம், குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். எத்தனை தெய்வங்கள் இருப்பினும் எல்லாவித பூசைகள் மற்றும் வழிபாடுகளிலும் குலதெய்வத்திற்கே முதலிடம். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினைத் தரும். மேலும் - மற்ற தெய்வவழிபாடுகளின் பலன்களையும் பெற்றுத்தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று - அலட்சியப்படுத்தக்கூடாது. எமன் கூடஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்றுத்தான் உயிரை எடுக்க முடியும்.நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.நம் குடும்பத்தைப் பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம் குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மைப் பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.
முக்கியமாக கிரக பெயர்ச்சி காலங்களில் குல தெய்வத்தினை வழிபடுவது மற்ற கோயில்களில் வழிபடுவதை விட மேலான பலனைத் தரும் என சாஸ்திரங்களும், ஜோதிட வல்லுனர்களும் தெரிவிக்கின்றனர். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை.யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள் வழிபாடுகள் மற்றும் பரிகாரங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்துவரவேண்டும்.நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள் உறவினர்கள் மற்றும் பங்காளிகளுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். நம் வாழ்க்கையில் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும். குலதெய்வமே தெரியாதவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குருஓரையில் கால பைரவர் சந்நிதிக்கு சென்று அர்ச்சனை செய்து தங்களின் குலதெய்வத்தினை காட்டும் படி காலபைரவ பெருமானிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். அந்த சமயத்தில் வேறு எந்த கோரிக்கைகளையும் காலபைரவ பெருமானிடம் முன் வைக்கக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் வியாழக்கிழமையில் குரு ஓரையில் காலபைரவ பெருமானுக்கு அர்ச்சனைசெய்து வர வேண்டும்.மேலும் அர்ச்சனை முடிந்தவுடன் பசுவிற்கு ஒரு கட்டு அகத்தி கீரை உணவாக அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வாரங்கள் செய்து வரும் 9 வியாழக்கிழமைகளில் கண்டிப்பாக தாம்பத்திய உறவு கூடாது. இவ்வாறு செய்து வரும் காலத்தில் காலபைரவர் தங்களின் குலதெய்வம் பற்றி அறியவைப்பார். யாராவது குலதெய்வம் பற்றி தங்களுக்கு தகவல் தரலாம் அல்லது கனவில் தங்களின் குலதெய்வம் பற்றி விபரம் கிடைக்கும்.மேற்கண்ட வழிபாட்டின் போது அசைவ உண்வை நிரந்தரமாக நிறுத்திய பின்னரே செய்ய வேண்டும். அசை வத்தினை நிறுத்தாமல் செய்தால் விபரீத விளைவுகள் ஏற்படும். அசைவ உணவு மது பழக்கம் இவற்றை தவிர்த்து வழிபாடு செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
பெண்களும் குல தெய்வங்களும:
பொதுவாக பெண்களுக்கு மட்டும் இரண்டு குலதெய்வங்களை வழிபடும் பாக்கியத்தை இறைவன் தந்து ள்ளார். பிறந்த வீட்டில் ஒரு குலதெய்வம், புகுந்த வீட்டில் ஒரு குலதெய்வம் திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது.பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வருடத்திற்கு ஒரு முறையாவது சென்று வழிபட வேண்டும். இதனால் அவர்கள் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியையும், புகுந்த வீட்டில் எந்த பிரச்சி னையும் இல்லாமல் இருக்க ஆசியை பிறந்த வீட்டு குலதெய்வம் வழங்குகிறது. இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடுசெய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழா காலங்களில் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.
குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணியகாரியங்கள் ஈடேறுவதில் சிக்கல் பொருளாதார நிலையில் மந்தமானபோக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம் பிள்ளைகள் வழியில் தொல்லை, எவ்வளவு வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாதது என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால் மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.வீடு, வாசல், நிலம், நகை இவையெல்லாம் காசிருந்தால் வாங்க முடிந்தவை. கல்வி, பிள்ளைப்பேறு, ஆரோக்கியம், நீ ண்ட ஆயுள் இவை எல்லாம் இறை அருள் இருந்தால் மட்டுமே பெற முடியும்.இந்த பூமியில் ஒரு நல்ல வாழ்வு வாழ்ந்திட இரண்டும்தான் தேவைப்படுகிறது. இதில் பின்னது அருள்சார்ந்த விஷயம் வந்துவிட்டால் முன்னதாக உள்ள பொருள் சார்ந்த விஷயங்களை நாம் சுலபமாக அடைந்துவிட்லாம். எனவே பிரதான தேவையே இறை அருள்தான்!எனவே உங்கள் குல தெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி அதாவது மாதம் ஒரு முறையாவது செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கை போகும் போக்கை..அடிக்கடி செல்ல முடியாதவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து பாரம்பரிய வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத் தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும்.வீட்டில் திருமணத்தடை, சந்தான பிராப்தி இன்மை இவை இருந்தால் குல தெய்வ வழிபாடு சரி செய்து விடும். சிலர் தவறாக புரிந்து கொள்வார்கள்-குலதெய்வத்தை வழிபடாத கோளாறுதான் இந்த தடைகள் என்று. ஆனால் அது அப்படியல்ல நமக்கு உள்ள கெட்ட நேரம்தான் இதற்கெல்லாம் காரணம். அதனை சரி செய்ய குலதெய்வம்அருள் புரியும். நமக்கு எதிரான அத்தனை துர் சக்திகளையும் அழிக்கும் வல்லமை உடையது. தன் பிள்ளைகளின் நலனுக்காக அத்தனை தெய்வத்திடமும் வேண்டுகோள் வைக்கும். அதனால்தான் நம் நல்வரவிற்காக காத்திருக்கும்.
நமக்கான தெய்வங்கள்:
1. வீட்டு சாமி
தங்களுக்குள் வழிகாட்டியாய் விளங்கி வாழ்ந்து மறைந்த முன்னோர்களையோ கன்னியாக இருந்த நிலையில் வாழ்ந்து மறைந்த பெண்ணையே நாம் வீட்டு சாமியாக வழிபடும் மரபு காணப்படுகிறது. இது பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். இதனை வீட்டுச் சாமி என்று கூறுவதுண்டு. உதாரணமாக நம்மில் அருள்மிகு கொப்பாட்டி அம்மன், அருள்மிகு பச்சைநாச்சியம்மன், அருள்மிகு காமாட்சி அம்மன்.. அருள்மிகு பாப்பாத்தி அம்மன்.
2. குல தெய்வம்
ஒரு குறிப்பிட்ட மூதாதையின் மரபில் தோன்றியதன் வாயிலாக ஒருவருக்கொருவர் உறவு கொண்டுள்ள குழுவே 'குலம்' ஆகும். இரத்த உறவுடைய பங்காளிகள் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர். இவர்களுக்குள் திருமண உறவு நடைபெறாது. இவ்வாறு அமையும் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனித் தெய்வமும் கோயிலும் இருக்கும். இதுவே குலதெய்வம் என்றும் குலதெய்வக் கோயில் என்றும் குறிப்பிடப்படும். குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மை உண்டு குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே என்ற பழமொழிகள் குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும். பூப்புச் சடங்கு, திருமணம், காதணி விழா அழைப்பிதழ்களில் குலதெய்வத்தின் பெயர் தவறாது இடம்பெறுவதை நீங்கள் காணலாம்.
குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.
ஒரே குடும்பத்தில் (பங்காளிகள்) எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல்போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசி கள் எளிதாக வந்து சேரும். நம் முன்னோர்களால் வழிபடப்பட்ட குல தெய்வத்தின் அருள் நம்மீது பட்டால் துன்பங்கள் பறந்திடும். பல பிரச்சினைகளில் சிக்கி உழல்பவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குலதெய்வத்தை நேரில் - சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும்.
மற்ற கோவில் வழிபாட்டை விட குலதெய்வ வழிபாட்டில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் மற்ற கோவில்களில் பூஜை மட்டுமே செய்கிறோம். ஆனால் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்கிறோம்.
குலதெய்வ வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது தீராத நோய்களுக்கு பரிகாரம்பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பதுமுதலிய பயன்கள் பெறப்படுகிறது. அடிப்படையில் இந்து மதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது. அதாவது அனைத்தையும் துறந்து தியானம் தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.
எனவே நமது பங்காளிகள் குலதெய்வ வழிபாட்டை தவறாது செய்து எல்லாம் வல்ல மங்களத்து அருள்மிகு ஸ்ரீ அரவாயி அம்மன், அருள்மிகு ஸ்ரீ புரவிக்காலர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ செ ட்டியப்பன் ஆகியோரது அருளும், ஆசியும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டிக் கொள்கிறோம்.
சிவமயம்
5.8.2018 ஆடி 20ம் தேதி ஆன இன்று இங்கு விஜயம் செய்திருக்கும் அனைத்து பங்காளிகளையும் மற்றும் நம் உறவினர்களையும் வரவேற்பதில் ஆறுநாட்டு வேளாளர் குல சமயமந்திரி கோத்திரத்தார் நிர்வாகக் குழுவினர் பெருமை அடைகின்றோம். நமது மகா பூஜை 2003 இல் ஆரம்பித்து 2006, 2009, 2012, 2015, 2018 இல் ஆறாவது மகாபெரும் பூஜையாக வெகு விமரிசையாக இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் இந்தியா, இலங்கை, மலேசியா மற்ற அனைத்து நாடுகளில் இருந்தும் வந்திருக்கும் பங்காளிகளும் மற்றும் நம் உறவினர்களும் மங்களத்தில் அருள்மிகு ஸ்ரீ அரவாயி அம்மன், அருள்மிகு ஸ்ரீ செட்டியப்பன், அருள்மிகு ஸ்ரீ புரவிக்காலர், சந்நிதியில் ஒன்று கூடி இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.எதிர்காலத்தில் நம் இளைய தலைமுறைக்கு மாபெரும் பணிகள் காத்திருக்கின்றது. நமது அடுத்த இலக்கு நமது குல தெய்வக்கோயிலின் கும்பாபிஷேகப் பணிகளை ஆரம்பித்து நிறைவடையச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.
இன்று முதல் எல்லா பங்காளிகளும் இதை ஒரு தார்மீக மந்திரமாக எடுத்து ஏற்றுக்கொண்டு எல்லா ஊர்களிலும் குழுக்களை ஏற்படுத்தி வேலைகளை ஆரம்பிக்கவும். இத்தருணத்தில் நமது 2003, 2006, 2009, 2012, 2015 நிர்வாகக் குழுவினர் தற்பொழுது இருக்கும் 2018 நிர்வாகக்குழுவினர் மிகச் சிறப்பாக நமது மகா பூஜையை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே நமது கோவிலின் கும்பாபிஷேக வேலைகளை ஆரம்பிப்பதில் துடிப்புடன் எந்த சிரமும் இல்லாமல் வெகுவிரைவில் முடித்து விடுவோம் என்ற உறுதியுடன் எல்லாம் வல்ல அருள்மிகு ஸ்ரீ அரவாயி அம்மன், அருள்மிகு ஸ்ரீ புரவிக்காலர், அருள்மிகு ஸ்ரீ செட்டியப்பன் அருள்புரிவாராக என்று வேண்டுகின்றோம்.
இப்படிக்கு :
ஆறுநாட்டு வேளாளர் குல சமயமந்திரி கோத்திரத்தார் சம்மேளனம்.
நன்றி.