நமது குல தெய்வ கோவில் பூமி பூஜை அழைப்பிதழ்

Temple History

Temple Image 1 Temple Image 2

ஆறு நாட்டு வேளாளர்களின் ஆதி ஊர் சிதம்பரம். ஆறு நாட்டு வேளாளர் என்ற ஜாதி 1170-1192ம் ஆண்டுகளின் இடையே ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நம் வேளாளர் குலத்தினர் 1700-1800 இடையேயான வருடங்களில் சிதம்பரத்தை விட்டு திருச்சிக்கு குடியேறியிருக்கிறார்கள். திருச்சியில் 1876ல் தான் நிலம் வாங்கியிருக்கிறார்கள் என தடயங்கள் உள்ளன. ஆக மேற்கண்ட உறுதியான ஆதாரங்களின் துணையுடன் ஆறுநாட்டு வேளாளர்களின் கி.பி.12ம் நூற்றாண்டுக்கு முன்பே சிதம்பரத்தில் வசித்து வாழ்ந்துள்ளனர்.அவர்கள் 12ம் நூற்றாண்டில் தமக்கென்று ஓர் மடத்தையும், சத்திரத்தையும் ஸ்தாபித்துள்ளார்கள் எனவும் புலப்படுகிறது. இவர் திருச்சி ஜில்லாவிற்கு வந்தது ஏன் இந்திய சரித்திர வரலாற்றை ஆராயும் போது, ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்றிய காலம் வரை இந்தியாவிற்குள் பல ஊர் அரசர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி நாட்டைப் பிடிக்கும் ஆசையில் யுத்தம் செய்து, நாடே நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறது. குறிப்பாக வடக்கிலிருந்து முஸ்லீம் அரசர்கள் தென்னாட்டிலுள்ள கோவில்களில் உள்ள தங்கம், வைரம் போன்ற செல்வங்களை கொள்ளையடிக்கும் நோக்கில் அடிக்கடி கடல், ஆறுகள் வழியாகவும் வந்து சென்றிருக்கிறார்கள்.யுத்தத்திற்கும், கொள்ளையடிக்க வரும் எதிராளிகளை சமாளிப்பதற்கும், தென்னாட்டிலுள்ள அரசர்கள் தங்கள் படைகளிலுள்ள போர் வீரர்கள் மடியும் போது, மீண்டும் மீண்டும் போர்ப்படைக்கான வீரர்களை திரட்டி இருக்கிறார்கள். வீட்டுக்கு ஒருவர், இருவர் என திரட்டி உள்ளனர். இதனால் பல குடும்பங்களில் நிம்மதி இல்லை.

சிதம்பரம் வட்டத்தில் கடல் 10 கிலோ மீட்டர் தொலைவிலும், சிதம்பரம் ஊடே ஆறு ஓடுவதாலும், இஸ்லாமியப்படைகள் அடிக்கடி இவற்றின் வழியே வந்து கோயில்களை கொள்ளையடித்தும், எதிர்ப்பட்டவர்களை கொன்றும் கொடுமைகள் செய்தனர், இதனால் ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தினர் நிம்மதி இழந்தனர். எனவே தமக்கு கஷ்டமும், - நஷ்டமும் இன்றி வாழ கடல், ஆறு இல்லாத மேட்டுப்பகுதியான திருச்சி ஜில்லாவை தேர்ந்தெடுத்தனர். ஆறு நாட்டு வேளாளர் குலத்தினர் சிறிது, சிறிதாக 17ம் நூற்றாண்டிலிருந்து 18ம் நூற்றாண்டுக்குள் திருச்சி ஜில்லாவிற்கு வருகை தந்து விரும்பிய ஊர்களில் தங்கி உள்ளனர். இவர்கள் 18ம் நூற்றாண்டு நிலத்தை கிரையம் செய்ததற்கு போதிய சான்றுகள் உள்ளன. ஆறுநாட்டு வேளாளர்களை பற்றி சரித்திரம் கூறுவது சிதம்பரத் தில் வசித்து வந்த ஆறுநாட்டு வேளாளர்கள் மிகவும் கௌரவமாகவும், சுதந்திரமாகவும், பிறரிடம் கடன் வாங்காமலும், உழவுத்தொழில் ஒன்றையே செய்தும் வாழ்ந்தும் வந்திருக்கிறார்கள்.

Temple Image 1 Temple Image 2
Image Description

Historical background

தமிழ்நாட்டின் முக்கியமான ஸ்ரீ அரவாய் அம்மன் கோவில், அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு ஆன்மிக மையமாக செயல்படுகிறது. அம்மன், இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகளை பிரதிபலித்து சமுதாயத்தைப் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது. திராவிடக் கட்டிடக்கலையில் அழகுற மேம்படுத்தப்பட்ட இந்த கோவிலில், ஆடி திருவிழா உள்ளிட்ட முக்கிய பூஜைகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.

Donate

கோவில் தற்போது கட்டுமானத்தில் உள்ளது, மேலும் நன்கொடை அளிக்கும் விதிமுறைகள் கோவில் நிர்வாகக் குழுவினரால் பின்னர் அறிவிக்கப்படும். கோவில் தற்போது பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளை ஏற்கவில்லை.

Image Description

Daily Rituals

The temple follows a daily routine of rituals that include morning and evening Poojas, with special significance given to rituals on Fridays, days considered auspicious for the goddess.

Devotee Practices

Many devotees undertake vows and offer traditional practices like rolling around the temple's outer sanctum (Anga Pradakshinam) or carrying a milk pot (Paal Kudam) to fulfill their promises to the goddess

Watch These Videos

Get in Touch

Click here to view location on map